புதிய அரசியலமைப்பு தொடர்பில் விசேட கலந்துரையாடல்
முன்வைக்கப்பட்டிருக்கும் புதிய அரசியலமைப்பு தொடர்பிலான கலந்துரையாடல் நிகழ்வு ஒன்று தகவல் வழிகாட்டல் மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் நாளை பிற்பகல் 4.00 மணியளவில் யாழ்ப்பாணம் - மானிப்பாய் வீதியில் அமைந்துள்ள பிள்ளையார் இன் ஹோட்டல் வரவேற்பு மண்டபத்தில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இக் கலந்துரையாடல் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ மாவை. சோ. சேனாதிராஜா அவர்களும் , அரசியலமைப்பு வழிநடாத்தல் குழுவின் உறுப்பினரும் - பாராளுமன்ற உறுப்பினருமாகிய கௌரவ எம். ஏ. சுமந்திரன் அவர்களும் கலந்து சிறப்பிக்க இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. மேற்படி நிகழ்வில் சமூக ஆர்வளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் அரசியல் ஆய்வாளர்கள் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுக்கின்றார்கள்.
தகவல் : என். எம். அப்துல்லாஹ்


Comments
Post a Comment