யாழ்ப்பாணத்தில் மீன் மழை பெய்துள்ளது
யாழ்ப்பாணம் – நல்லூர் பகுதியில் நேற்று பெய்த மழைநீரில் மீன்களும் வந்து வீழ்ந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
வடக்கில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் பெய்து வரும் தொடர் மழையில் நேற்று மாலை தொடக்கம் அப்பகுதியில் மீன்களும் வீழ்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மழையுடன் சில வகை மீன்களும் நிலத்தில் பரவலாக வந்து வீழ்வதாகத் தெரிவிக்கும் அப்பகுதி மக்கள், இந்த நிகழ்வு தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாக நடைபெறுவதாகத் தெரிவித்தனர்.
மேலும் குறித்த பகுதியில் பெருமளவானோர் கூடி இந்தச் சம்பவத்தை வியப்புடன் அவதானித்து வருவதாகவும் அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன


Comments
Post a Comment