பிரதிப் பரீட்சை ஆணையாளர் பணி நீக்கம்
பரீட்சைகள் திணைக்களத்தின் இரகசிய மற்றும் நிறுவன பரீட்சை பிரிவு பிரதானியாக செயற்பட்ட பிரதிப் பரீட்சை ஆணையாளர் இன்று (10) முதல் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடமை துஷ்பிரயோகம் மற்றும் குற்றச்சாட்டுக்கள் என்பன தொடர்பிலேயே இவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாராச்சியினால், இராஜாங்க சேவையின் கல்விச் சேவை குழுவின் அனுமதியின் பேரில் இந்த பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


Comments
Post a Comment