குச்சவெளியில் உள்ளுராட்சி தேர்தல் தொடர்பான கலந்துரையாடல்


  
திருகோணமலை குச்சவெளி பிரதேசத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களுக்கும் ,திருகோணமலை மாவாட்ட பாராமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்குமிடையிலான காலந்துரையாடலொன்று நேற்று (13) குச்சவெளியில் நடைபெற்றது.

இதன் போது எதிர்வருகின்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலை எவ்வாறு எதிர்நோக்குவது மற்றும் வேற்பாளர்களாக யாரை நியமிப்பது தொடர்பாகவும் தனித்து கேட்பதா அல்லது இணைந்து கேட்பதா போன்ற விடயங்கள் கட்சி ஆதரவாளர்களுடன் கலந்துரையாடப்பட்டதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் தெரிவித்தார்.

இதன் போது முன்னால் மாகாண சபை உறுப்பினர் ஆர்.ஆர்.அன்வர்,குச்சவெளி பிரதேச சபையின் முன்னால் உறுப்பினர்கள், கட்சி ஆதரவாளர்கள் எனப்பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.

Comments