பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கின் நிதி ஒதுக்கீட்டில் காத்தான்குடி ரிஸ்வி நகர் மஸ்ஜிதுல் சலாஹ் பள்ளிவாயலுக்கான ஒலிபெருக்கி சாதனங்கள் வழங்கி வைப்பு

எம்.ரீ. ஹைதர் அலி

முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்கின் 2017ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் காத்தான்குடி ரிஸ்வி நகர் மஸ்ஜிதுல் சலாஹ் பள்ளிவாயலுக்கான ஒலிபெருக்கி சாதனங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

இதனை, முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு தொகுதி அமைப்பாளரும், ஸ்ரீ லங்கா ஷிபா பவுண்டேசனின் தலைவருமான பொறியியலாளர் ஷிப்லி பாறூக், காத்தான்குடி ரிஸ்வி நகர் மஸ்ஜிதுல் சலாஹ் பள்ளிவாயல் நிருவாக சபையினரிடம் 2017.11.26ஆந்திகதி கையளித்தார்.

காத்தான்குடியின் எல்லைப் பிரதேசத்தில் அமைந்துள்ள இப்பள்ளிவாயலானது பல்வேறுபட்ட குறைபாடுகளுடன் கானப்பட்டதனைத் தொடர்ந்து பள்ளிவாயல் நிருவாகத்தினர் விடுத்த வேண்டுகோளுக்கமைவாக மிக நீண்ட காலத்  தேவைப்பாடாக காணப்பட்ட சுமார் 50000 ரூபா பெறுமதியான ஒலிபெருக்கி சாதனங்கள் இதன்போது வழங்கி வைக்கப்பட்டது.  

பின்தங்கிய பிரதேசங்களை அபிவிருத்தி செய்யும் நோக்கில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் எல்லைப்புற பிரதேசங்களை மையப்படுத்தி இத்தகைய பல்வேறுபட்ட அபிவிருத்தி செயற்றிட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Comments