வௌிநாட்டில் தொழில் புரிவோருக்கு ஓய்வூதியம்.. அமைச்சர் அறிவித்தார்.
வௌிநாட்டில் தொழில் புரிவோருக்காக முன்மொழியப்பட்ட ஓய்வூதியத் திட்டம் ஒன்றை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் வழங்க முடியும் என்று நீதி மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர தலதா அத்துபோரல கூறியுள்ளார்.
வௌிநாட்டில் இருக்கும் போது பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்த 38 பேருக்கு இழப்பீடு வழங்குவதற்காக வௌிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அலுவலகத்தில் இடம்பெற்ற நிகழ்விலேயே அவர் ஓய்வூதியத் திட்டம் பற்றி கூறினார்.
இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவது இலகுவான காரியமல்ல என்றும் அவர் தனதுரையில் கூறியுள்ளார்.


Comments
Post a Comment