சொல்லாமல் கொள்ளாமல் அன்சாரின் இல்லம் வந்த ஜனாதிபதி மைத்திரி.

Ariff S Naleem

கதுருவெல,முஸ்லிம் கொலனி இல 12 ல் அமைந்திருக்கும் வீட்டில் தான் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அல்-ஹாஜ் S.H.M.அன்சார் குடியிருக்கிறார்.அவர் மட்டுமல்ல அவரின் தாய் மாமாவான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அல் ஹாஜ் S.A.அப்துல் மஜீட் அவர்களும் அங்கேதான் தொன்றுதொட்டு வாழ்ந்து வருகிறார்.

நேற்று இரவு சரியாக 7:45 மணி இருக்கும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அல் ஹாஜ் S.H.M.அன்சார் அவர்களின் வீட்டுக்கதவு தட்டப்படுகிறது. அன்சார்,அன்சார் என அழைக்கும் சத்தம் யாராக இருக்கும் கதவை திறந்த அன்சார் வெளியே நிற்பவரை கண்டு திகைப்புறுகிறார்.

சேர் என்ன எதுலட என்ன என வாஞ்சையோடு வீட்டுக்குள் அழைத்துச்செல்கிறார். அன்சார் அவர்களின் வீட்டு வராந்தாவில் போடப்பட்டுக்கிடந்த ஆசனமொன்றில் அமர்ந்து கொண்ட ஜனாதிபதி மைத்திரி,உங்களை காண வேண்டுமென எண்ணினேன் ஆகவேதான் வந்தேன் என்றார். பொலன்னறுவையில் நடைபெற்றுவரும் அபிவிருத்தி சார்ந்த பொதுவான விடயங்கள் பற்றி அன்சாரோடும் அங்கிருந்தவர்களோடும் அளவளாவி விட்டு விடைபெற்றுச்செல்கிறார். 

ஜனாதிபதி மைத்திரி அவர்களின் வருகையின் போது அவரின் வாகன சாரதி மட்டுமே உடன் இருந்தார். பாதுகாப்பு அதிகாரிகள் எவரையும் காண கிடைக்கவில்லை.

இன்று காலை அல் ஹாஜ் S.H.M.அன்சார் அவர்களை தொடர்பு கொண்டு எல்லை நிர்ணய அதிகாரிகளுடன் இடம்பெற்ற நேற்றைய பேச்சுவார்தைகள் பற்றி கேட்ட போதே முன்னாள் மாகாண சபை உறுப்பினர் இரவு ஜனாதிபதி தன்னை காண வந்ததாகவும் இதன் போது பொலன்னறுவை சிறுபான்மையினரான தமிழ் பேசுவோர் புதிய எல்லை நிர்ணய அடிப்படையில் தேர்தல்கள் நடைபெறுமிடத்து தங்களின் மக்கள் பிரதிநிதிகளை இழக்க வாய்ப்பிருப்பதாகவும் இது விடயத்தில் கவனம் செலுத்துமாறும் கேட்டுக்கொண்டதாகவும் சொன்னார்.

வரும் மாகாண சபை தேர்தலில் நாலக கொலன்னே ஐ.தே க. சார்பில் முதன்மை வேட்பாளராக நிறுத்தப்படுமிடத்து S.H.M.அன்சார் பாராளுமன்ற உறுப்பினராகும் வாய்புகள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தில் இடமிருந்து வலமாக அல்-ஹாஜ் S.A.அப்துல்லதீப்(லதீப் கோபரேஷன் உறிமையாளர்,S.A.அப்துல் மஜீட் (நிறுவுனர் மஜீதியா அரபு கலாசாலை) அல் ஹாஜ் S.H.M.அன்சார் மு.மா.ச) ஆகியோரே ஜானாதிபதியுடன் காணப்படுகின்றனர்.

Comments