கணித வினாடி வினாப் போட்டியில் வெண்கலப் பதக்கம் பெற்ற மாணவர்கள் கௌரவிப்பு
கடந்த வாரம் தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற உலக கணித வினாடி வினாப் போட்டியில் வெண்கலப் பதக்கம் மற்றும் விசேட சித்தி பெற்ற மாணவிகளை கெளரவிக்கும் வீதி ஊர்வலம் 14 ஆம் திகதி நடைபெற்றது.
கிண்ணியா முஸ்லிம் மகளிர் மகாவித்தியாலயத்தைச் சேர்ந்த முகம்மது றியாஸ் ஹம்தா அனார் என்ற மாணவி வெண்கலப் பதக்கத்தையும் முகம்மது ஜிப்ரி சாரா சம்ஆ என்ற மாணவி விசேட சித்தி சான்று தழையும் பெற்று இந்த சாதனையைப் படைத்துள்ளனர்
இந்த ஊர்வலத்தை பாடசாலை அபிபிருத்தி சபை ஏற்பாடு செய்திருந்தது.







Comments
Post a Comment