மூதூர் : மாணவர்கள் பாராட்டி கௌரவிப்பு


திருகோணமலை மூதூர் கல்வி வலயத்திலுள்ள தோப்பூர் றோயல் கணிஷ்ட பாடசாலையில் நேற்று முன்தினம் ( 13) நடைபெற்ற தரம் 05 புலமைப் பரீசில் பரிட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கின்ற நிகழ்வும். உலக ஆசிரியர் தினத்தையொட்டி ஆசியர்களை கௌரவிக்கின்ற நிகழ்வும் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் எற்பாட்டில் அதிபர் எம்.பி.எம்..அனஸ் தலைமையில் பாடசாலை மண்டபத்தில் நடை பெற்றது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கோட்டக்கல்விப்பணிப்பாளர் ஏ.ஜே.ஜப்பார் கலந்துகொண்டார்.

இதன் போது புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களும் ஆசிரியர்களும் தோப்பூர் முகைதீன் ஜும்மா பெரிய பள்ளிவாசலில் இருந்து,பேன்ட் வாத்தியத்துடன் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களும் ஆசிரியர்களும், அழைத்துவரப்பட்டனர்.

இந் நிகழ்வில் சித்தியடைந்த மாணவர்களுக்கு பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கிகௌரவிக்கப்பட்டதோடு பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்களும் இதில் பாராட்டப்பட்டார்கள்.இந் நிகழ்வில் பெற்றார்கள் நலன்விரும்பிகள் ஆசிரியர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

Comments