ஹக்கீம் வைத்திருக்கும் பதவி எந்த ஊருக்கு சொந்தமானது..?


சமூகம் சமூகம் என்று இருந்ததையும் இழந்து நிற்கிறது கல்முனை மாநகரம், 
அன்று சக்திவாய்ந்த அரசியல்வாதிகள் இருந்த இடம், 
இன்று அரசியல் சக்திகள் எல்லாவற்றையும் பிறருக்கு பறிகொடுத்துவிட்டு வாயைப் பிளந்து கொண்டு ஏமாந்து நிற்கிறது கல்முனை மாநகரம்.....!
இன்று அபிவிருத்தியின்றி பசியால் வாடுகிறது, பிள்ளைகளுக்கு வயிரு நிறைய சோறுபோட முடியவில்லை, அதனால் ஒற்றுமை சீர்குழைந்து நிற்கிறது.

நாங்கள் கெபினட் மந்திரியாக ஏ.ஆர்.எம் மன்சூரை பெற்றிருந்தோம், அன்று சமூகம் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டபோது தனித்துவமான குரல் வேண்டும் என்றதற்காக அஷ்ரப் அவர்களை ஆதரித்தோம்.

அதன் பிற்பாடு கல்முனையின் சார்பாக பின்னாலில் கெபினட் அமைச்சராக அஷ்ரப் அவர்கள் வந்தார், அது கல்முனை மாநகர மக்களுக்கு இழந்த ஒரு அதிகாரத்தை மீளவும் பெற்றுக்கொண்ட சந்தோசத்தை ஏற்படுத்தியிருந்தது.
அஷ்ரப் அவர்களின் மரணத்தின் பிற்பாடு அந்த நிலைமை மாற்ற மடைந்தது, கட்சியின் தலைமை பதவி கண்டியைச் சேர்ந்த ஹக்கீம் அவர்களுக்கு சென்றுவிட்டது, ஆனால் கல்முனைக்கு கிடைக்கவேண்டிய கெபினட் அமைச்சி பதவியும் அதனோடு சேர்ந்தே போய்விட்டது.

கல்முனை மக்கள் இலங்கை முஸ்லிம்களுக்கு முகவரி தேடிக்கொடுத்த கட்சியின் தலைவருக்காக தியாகம் செய்தார்கள். ஆனால் இன்று அவரது மரணத்தின் பின் கட்சியின் தலைமை பதவி மட்டுமல்ல, கல்முனையின் அரசியல் அந்தஷ்த்தும் பறிக்கப்பட்டுவிட்டது.

இந்த கட்சியிலே தொண்டர்களாக இருந்தவர்கள் எல்லாம் இன்று அவர்களது பகுதிகளுக்கு ராஜாவாக வலம் வருகின்றார்கள், ஆனால் அவர்களுக்கெல்லாம் வழிகாட்டிய தலைமை பிறந்த ஊர் அநாதையாக கிடக்கிறது.

கண்டியைச் சேர்ந்த ஹக்கீம் அவர்களுக்கு கிடைத்திருக்கும் கெபினட் அமைச்சர் பதவி என்பது கல்முனைக்கு கிடைக்கவேண்டிய பெருமதி மிக்க சொத்தாகும். அந்த பதவியை பெற்றபோது ஹக்கீம் சொன்னார் நான் இனிமேல் கல்முனையில்தான் குடியிருப்பேன் என்று, அப்படி ஏன் சொன்னார் தெறியுமா? இந்த பதவி நிச்சயமாக கல்முனைக்கு சொந்தமானது என்ற காரணத்தினாலாகும்.

ஆகவே, நாங்கள் கேட்பதெல்லாம் ஒன்றுதான்..!
கட்சியின் தலைமை பதவியை வேண்மென்றால் நீங்கள் வைத்துக்கொள்ளுங்கள். கல்முனை மாநகருக்கு கிடைக்கவேண்டிய கெபினட் அமைச்சி பதவியை தந்துவிடுங்கள்.

இதைத்தான் சொல்லுவதோ...(காத்துக் கிடந்தவன் காதலியை நேற்று வந்தவன் கூட்டிச்சென்றது போல் என்று.)
கல்முனை மக்களே..! புரிந்து கொள்ளுங்கள் நாம் ஏமந்தது மட்டுமல்ல, இருந்ததையும் இழந்தும் நிற்கின்றோம் என்பதை.
புரிந்தால் சரிதான்..!

எம்எச்எம்இப்றாஹிம்
கல்முனை.

Comments