பௌத்தர்களுக்கு எதிராக ஜிஹாத் நடக்கிறது: அசின் விராது!
1938ம் ஆண்டு முதல் தமது நாட்டில் பௌத்த – முஸ்லிம் பிணக்கு இருந்து வருவதாகவும் தமக்கெதிரான ஜிஹாத் நடந்து வருவதாகவும் ஞானசாரவிடம் தெரிவித்துள்ளார் அவரது தோழனும் எலகின் பௌத்த பயங்கரவாதத்தின் முகம் என வர்ணிக்கப்படும் நபருமான அசின் விராது.
அண்மையில் ஞானசார மியன்மார் சென்றிருந்த வேளையில் மியன்மாரில் நிலவும் முஸ்லிம்களுக்கு எதிரான சூழ்நிலை குறித்து விரிவாக பேசியுள்ள அசின் விராது, 1942ம் ஆண்டு மே மாதம் இடம்பெற்ற வன்முறையிலிருந்து இன்று வரை முஸ்லிம்களுக்கு எதிராக பௌத்தர்கள் அங்கு ‘போராடுவதாக’ தெரிவித்திருக்கிறார்.
இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதத்தை வளர்க்க ஆயுதமாகப் பயன்பட்ட ஞானசார, ரோஹிங்ய முஸ்லிம்கள் தொடர்பில் அசின் விராதுவுடன் பேச்சுவார்த்தை நடாத்தியதாக தெரிவித்திருந்தன் பின்னணியில் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
1970 முதல் ஏறத்தாழ 8 லட்சம் ரோஹிங்யர்கள் இடம்பெயர்ந்து வேறு நாடுகளில் குடியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Comments
Post a Comment