(வீடியோ)., பறிபோன காணிகளை மீட்டெடுப்பதற்கு அமீர் அலியுடன் கைகோர்த்து புதிய ஓட்டமாவடி பள்ளிவாயல் தலைமை செயற்பட வேண்டும். சாட்டோ மன்சூர் ஜுனைட் அதிபரிடம் பகிரங்க வேண்டுகோள்.

Ihzana Freed

ஓட்டமாவடி மொஹைதீன் ஜும்மா பள்ளிவாயலுக்கு புதிய தலைமைத்துவத்தினை வழங்க இருக்கின்ற முன்னாள் அதிபரும் கோட்ட கல்வி அதிகாரியுமான ஜுனைட் ஆசிரியரிடம் உரிமையுடன் வேண்டி கொள்வதாவது… நீங்கள் வெறுமனே ஓட்டமாவடி நம்பிக்கையாளர் சபையின் தலைவராக மட்டும் இருந்து விட கூடாது.
மாறாக எங்களிடம் இருந்து பறிபோயுள்ள 160 சதுர கொலோ மீற்றர் நிலத்தினையும் , நிலபுலங்களையும் எங்களுடைய அடுத்தடுத்த சந்ததியினரும், தலை முறையினரும் மீட்டெடுப்பதற்காக பள்ளிவாயல் தலைமையாக செயற்படுமாறு பகிரங்கமாக வேண்டிக்கொள்கின்றேன். அத்தோடு குறித்த எமது நிலபுலங்களை மீட்டுகொள்வதற்காக புதிய ஓட்டமாவடி பள்ளிவாயலின் தலைமை பிரதி அமைச்சர் அமீர் அலியுடன் கைகோர்த்து செயற்பட வேண்டும் என இந்த சமூகத்தின் ஓர் அங்கத்தவன் என்ற வகையிலும், அவருடைய குடும்ப உருப்பினர் என்ற வகையிலும் மேலும் தான் ஜுனைட் அதிபரிடம் வேண்டிகொள்வதாக சாட்டோ மன்சூர் உரையாற்றினார்.
அதிபர்களுக்கான போட்டி பரீட்ச்சையில் சித்தியடைந்தவர்களையும், கல்வி நிருவாக சேவைக்காக தெரிவு செய்யப்பட்டவர்களையும், ஐந்தாம் ஆண்டு புலமை பரீட்ச்சையில் சிந்தியடைந்தவர்கள், அதற்காக உழைத்த ஆசிரியர்கள் என பலதரப்பட்டவர்களை 29.10.2017 அன்று மாலை மீரா சமூக சேவைகள் ஒன்றியம் மீராவோடை அல்- ஹிதாயா மகா வித்தியாலயத்தில் கெளரவித்து நடாத்திய விழாவிலேயே  மேற்கண்டவாறு சமூக ஆர்வலரும் பிரதி அமைச்சர் அமீர் அலியின் தற்போதைய தீவிர அரசியல் செயற்பாட்டாளருமான சாட்டோ வை.எல்.மன்சூர் தெரிவித்தார்.
பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கலந்து கொண்ட குறித்த கெளரவிப்பு விழாவில் இடம் பெற்ற சாட்டோ மன்சூரின் உரையோடு, நிகழ்வின் சுருக்கமான காணொளி எமது இணைய நாளிதழ் வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

Comments