விளையாட்டில் ஆர்வம் கொண்ட மாணவர்களுக்கு சிறந்த எதிர்காலம் ஒன்றை உருவாக்குவது எமது கடமை- இம்ரான் எம்.பி

Ihzana Fareed

விளையாட்டில் ஆர்வம் கொண்ட மாணவர்களுக்கு சிறந்த எதிர்காலம் ஒன்றை உருவாக்குவது எமது கடமை என ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார் கடந்த வாரம் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரிவசத்தை சந்தித்து கலந்துரையாடும் போதே இவ்வாறு தெரிவித்தார் அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

இலங்கையின் கல்வி முறையைப் பொறுத்தவரை கல்வி செயற்பாடுகளில் ஆர்வம் கொண்ட மாணவர்களுக்கே பல்வேறு வகையான துறைகளை தெரிவு செய்யும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் விளையாட்டில் ஆர்வம் கொண்ட மாணவர்களுக்கு உரிய துறைகளை பெற்றுகொடுப்பதில் எமது கல்விமுறை தோல்வி கண்டுள்ளது.

இதனால் விளையாட்டு துறையில் ஆர்வமுள்ள மாணவர்கள் விரும்பியோ விரும்பாமலோ தொழில்வாய்ப்புகளை கருத்தில்கொண்டு விளையாட்டு துறையை கைவிட்டு கல்வி செயற்பாடுகளில் ஈடுபடுவதால் அவர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகிறது.

குறிப்பாக கிழக்கு மாகாணத்தை பொறுத்தவரை திறமைவாய்ந்த பல வீரர்கள் உள்ளனர் இவர்களை உரிய முறையில் பயிற்றுவித்தால் தேசிய சர்வேதேச மட்டத்தில் பிரகாசிக்கும் வீரர்களாக மாற்றலாம்.

ஆகவே இந்த மாணவர்கள் தமது விரும்பிய துறையை தேர்ந்தெடுக்க கூடிய வாய்ப்புக்களை நாம் வழங்கவேண்டும். அவ்வாறான வாய்ப்புக்களை வழங்கி விளையாட்டு துறை சார்ந்த தொழில்வாய்ப்புகளையும் விளையாட்டு சார்ந்த துறைகளையும் நாம் ஏற்படுத்தி கொடுத்தால் விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவர்களின் செயற்பாடுகளை நாம் ஊக்குவிக்கலாம். இதனால் கிரிக்கெட் மட்டுமன்றி ஏனைய விளையாட்டுகளிலும் சர்வதேச ரீதியில் திறமையை வெளிகாட்டும் மாணவர்களை நாம் உருவாகலாம்.

தற்போது வழங்கப்படவுள்ள விளையாட்டு பயிற்சி ஆசிரியர் நியமனம் சிறந்த முன்னெடுப்பாகும். இது போன்ற தொழில் வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்படுவதால் விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவர்களின் எதிர்காலம் நிச்சயிக்கப்படுகிறது. ஆட்சி மாற்றத்தின் போது நாம் வாக்களித்ததை போன்று இளைஞர் யுவதிகளுக்கான சிறந்த எதிர்காலத்தை கட்டியெழுப்புவத்கான ஆரம்ப புள்ளியாக இந்நியமனம் கானாப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது அத்தோடு நேர்முகப்பரீட்சையை முடித்தவர்களுக்கான நியமனங்கள் வழங்கப்படுவதை துரிதப்படுத்த வேண்டும்.

மேலும் விளையாட்டு அமைச்சுடன் கல்வி அமைச்சும் இணைந்து இவ்வாறான மேலும் பல செயல்திட்டங்களை தொடக்கி எமது வீரர்களின் திறமையை சர்வதேசத்துக்கு கொண்டுசெல்ல வேண்டும். குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் உள்ள வீரர்களின் நலன் கருதி பல விசேட செயல்திட்டங்களை கல்வி அமைச்சினூடாக முன்னெடுக்க வேண்டும் அதற்கு தேவையான சகல் ஒத்துழைப்புகளையும் வழங்க நாம் தயாராக உள்ளோம்.

Comments