(வீடியோ).,ஓட்டமாவடி பாத்திமா ஸஹ்றா, சிறாஜியா அறபு கல்லூரிகளுக்கு றோஹினா மஹ்ரூபினால் குர்-ஆன் பிரதிகள் கையளிப்பு…

Ihzana FareedAdd caption
Ihzana Fareed

முன்னாள் திருகோணமலை மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் முக்கிய புள்ளியும், இராஜாங்க அமைச்சருமான அஷ்ஷஹீத் எம்.ஈ.எச்.மஹ்ரூபின் புதல்வியும், தற்போதைய ஐக்கிய தேசிய கட்சியின் திருகோணமலை மாவட்ட இளம் பாராளுமன்ற உறுப்பினர் இம்றான் மஹ்ரூஃபின் மூத்த சகோதரியுமான றோஹினா மஹ்ரூஃப் ஓட்டமாவடியில் உள்ள பாத்திமா ஸஹ்றா பெண்கள் அறபு கல்லூரிக்கும், சிறாஜியா அறபுகல்லூரிக்கும் 450 அல்- குர் ஆன் பிரதிகளை இன்று 03.11.2017 வெள்ளிக்கிழமை உத்தியோக பூர்வமாக கையளித்தார்.

சமூக ஆர்வலரும், சாட்டோ இணைய தளத்தின் பணிப்பாளருமான வை.எல்.மன்சூரின் வேண்டுகோளுக்கு அமைய குறித்த இரண்டு அறபு கல்லூரிகளுக்கும் றோஹினா மஹ்ரூஃப் விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும். மேலும் பாத்திமா ஸஹ்றா பெண்கள் அறபு கல்லூரின் நிருவாகத்தினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைவாக குறித்த கலூரியில் முக்கிய பிரிவாக கருதப்படுகின்ற தகவல் தொழில் நுட்ட பிரிவிற்கு மேலதீகமாக தேவைப்படுகின்ற ஒரு தொகை கணணிகளை மிக விரைவில் பெற்றுத்தருவதாகவும் வாக்குறுதி அளிக்கப்பட்டது.
சமூக சேவையாளராகவும், பெண்களுடைய உரிமைகள், விதவைகளுக்கான வாழ்வாதாரங்கள், பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிரான குரல், அவர்களுடைய சுய தொழில்களுக்கான முயற்சிகள், என பலதரப்பட்ட சேவைகளை நாடு தழுவிய ரீதியில் செய்து வரும் றோஹினா மஹ்ரூஃபினுடைய குறித்த ஓட்டமாவடி அறபு கல்லூரிகளுக்கான விஜயத்தின் போது இடம் பெற்ற நிகழ்வின் சுருக்கமான காணொளி எமது இணைய நாளிதழ் வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது

Comments