காத்தான்குடி வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட மூன்று மாடிக் கட்டிடத்தொகுதி திறந்து வைப்பு
உங்கள் நண்பன் தமீம்
காத்தான்குடி மட்/மம/பதுரியா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட மூன்று மாடிக் கட்டிடத்தொகுதி மற்றும் அனர்த்த நேர சமையலறை கட்டிடம் என்பன கடந்த வியாழன்(16.11.2017) அன்று திறந்துவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரத ம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுநர் கௌரவ ரோஹித போகல்லாகம அவர்கள் கலந்துகொண்டதோடு விஷேட அதிதியாக முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு தொகுதி அமைப்பாளருமான பொறியியலாளர் ஷிப்லி பாறூக், இலங்கை மற்றும் மாலை தீவிற்கான ஐக்கிய அமெரிக்க தூதரகத்தின் உள்நாட்டு இராணுவ பிரிவிற்கான துணை இயக்குனர் ரிச்சட் ஸ்டன்லீ அவர்களும் கலந்து கொண்டனர்.
இப்பாடசாலையில் உள்ள இடவசதி பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யும் முகமாக ஐக்கிய அமெரிக்க அமைதிக்கான கட்டளை மையத்தின் நிதி அனுசரணையின் கீழ் இப்பாடசாலைக்கான கட்டடம் ஒன்றினை நிர்மாணிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் ஒரு சில காரணங்களினால் இப்பாடசாலை குறித்த அபிவிருத்தி திட்டத்திலிருந்து நீக்கப்பட்டிருந்தது.
இதனைத்தொடர்ந்து முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி அவர்கள் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் அல் ஹாஜ் நசீர் அஹமட் அவர்களின் ஒத்துழைப்புடன் மேற்கொண்ட தொடர் முயற்சியின் பலனாக கைவிடப்பட்டிருந்த இப்பாடசாலை கட்டிட அபிவிருத்தித் திட்டம் மீண்டும் ஐக்கிய அமெரிக்க அமைதிக்கான கட்டளை மையத்தின் நிதி அனுசரணையின் கீழ் நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதோடு இதற்கான செயற்படுத்தல் பணிகள் ஐக்கிய அமெரிக்க இராணுவத்தின் பொறியியல் பிரிவின் பூரண ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்டன.
தற்போது பன்னிரண்டு வகுப்பறையுடன் கூடியதாக நவீன முறையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இக்கட்டிடத்தினூடாக இப்பாடசாலையின் கல்வி நடவடிக்கைகள் விஸ்தரிக்கப்படுவதோடு எதிர்காலத்தில் மேலும் அதிகமான மாணவர்களை உள்வாங்க முடியும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Comments
Post a Comment