மியன்மார் ரோஹிங்கிய மக்களுக்கு இலங்கையில் இருந்து நேரில்சென்று உதவிய Qtv குழுவினர் நாடு திரும்புகின்றனர்.

எம்.ஐ.அஸ்பாக்

மியன்மார் ரோஹிங்கியாவில் இருந்து பங்களாதேஷ் ஹொக்‌ஷிபஷார் பகுதியில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ள மக்களுக்கு உதவிவழங்குவதற்காகச் சென்றிருந்த எமது Qtv யின் தவிசாளரும் SLFP யின்கல்குடா தொகுதி அமைப்பாளருமான மௌலவி mms.ஹாறூன்(ஸஹ்வி) மற்றும் Qtv குழுமத்தினர் இன்ஷா அல்லாஹ் நாளை(வியாழக்கிழமை) நாடு திரும்பவுள்ளனர்.

Qtv network ஊடக வலையமைப்பின் கோரிக்கைக்கு அமைய இலங்கை,இந்திய உறவுகள் வாரி வழங்கிய உதவிகளை உரியவர்களுக்கு நேரில்சென்று விநியோகிப்பதற்காகவே கடந்த மாதம் 15ம் திகதிபங்களாதேஷ் நாட்டிற்கு சென்றிருந்தனர்.

இதன்போது சகல வகையிலும் உதவிய இராஜாங்க அமைச்சர்கெளரவ MLAM ஹிஸ்புல்லாஹ் அவர்களுக்கும், பங்களாதேஷில் உள்ளஇலங்கைக்கான உயர்ஸ்தானிகர் திருமதி எஷோஜா குணசேகர,மற்றும் சிடாகோன் சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகமாணவர்களுக்கும் தமது மனமார்ந்த நன்றியினைதெரிவித்துக்கொள்கின்றோம்.

Comments