ரூபாய் 1.5 மில்லியன் முள்ளிப்பொத்தானை ஈச்ச நகர் கிராமத்தில் சதாம் வீதிக்கு கான்கிரீட் வீதியாக மாற்றியமைத்தல்

 Mahroof Riyal

கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டத்தில் தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் முள்ளிப்பொத்தானை ஈச்ச நகர் கிராமத்தில் சதாம் வீதிக்கு கான்கிரீட் வீதியாக மாற்றியமைத்தல் மதிப்பாய்வு 16.12.2017 திகதி அன்று முன்னால் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐக்கிய தேசியக் கட்சியின் சேருவில தொகுதியின் முதன்மை அமைப்பாளர் கௌரவ டாக்டர் அருண சிறிசேன அவர்கள் மூலமாக இடம் பெற்றது. இந்த திட்டத்தில் ரூபாய் 1.5 மில்லியன் செலவிடப்பட்டுள்ளது.

இந்த நிதி ஒதுக்கீட்டை கௌரவ பிரதமரின் அமைச்சர்கள் நடைமுறைப் படுத்திய கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ஒரு சிறப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டது.  ஒருங்கிணைப்பு செயலாளர் மகரூப்  றியால்தீன் அவர்களது வேண்டுகோளுக்கு இணங்க இந்த அபிவிருத்தி வேலை செய்யப்படுகிறது.

Comments