யாழில் 23 இந்திய மீனவர்கள் கைது

எல்லையை மீறி மீன் பிடியில் ஈடுபட்ட 23 இந்திய மீனவர்கள் யாழ்ப்பாண குடாநாட்டு கடற்பரப்பில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த மீனவர்கள் இன்று(12) அதிகாலை கச்சதீவு மற்றும் நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்களிடம் இருந்து 5 படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன்இ கைது செய்யப்பட்ட 23 மீனவர்களையும் யாழ். கடற்றொழில் திணைக்களத்திடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த மீனவர்கள் இராமேஸ்வரம் மண்டபம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்

Comments