அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும்: மியன்மாரில் போப் பிரான்சிஸ் தெரிவிப்பு
இக்சானா பரீட்
அனைத்துப் பிரிவினருக்கும் நீதி கிடைக்க வேண்டும் எனவும் அனைவரின் மனித உரிமைகளும் மதிக்கப்பட வேண்டும் எனவும் போப் பிரான்சிஸ் தெரிவித்தார்.
மியன்மாருக்கு 4 நாள் பயணம் மேற்கொண்டுள்ள அவர், அதிபர் மாளிகையில் நேற்று (28) நடைபெற்ற நிகழ்விலேயே இதனைக் குறிப்பிட்டார்.
அனைத்து இனப் பிரிவினரின் தனித்துவ அடையாளத்திற்கும் உரிய மரியாதை அளிக்கப்பட வேண்டும் எனவும் மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் எனவும் போப் வலியுறுத்தியுள்ளார்.
ரோஹிஞ்யாக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினையை மறைமுகமாகக் குறிப்பிட்டாலும், ரோஹிஞ்யா என்ற பெயரை தனது உரையில் போப் பிரான்சிஸ் குறிப்பிடவில்லை.
இந்த நிகழ்வில் தேசிய ஆலோசகர் ஆங் சான் சூகி கலந்துகொண்டார்.
முன்னதாக, மியன்மார் இராணுவத் தலைமை தளபதி மின் ஆங்ஹலைங், போப் பிரான்சிஸை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்.
நாட்டின் பாதுகாப்பை இராணுவம் உறுதி செய்வதாக இதன்போது போப்பிடம் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இராணுவ அடக்குமுறை காரணமாக சுமார் 6 இலட்சம் ரோஹிஞ்யாக்கள் நாட்டைவிட்டு வெளியேறி வங்கதேசத்தில் தஞ்சம் புகுந்தது சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், போப் பிரான்சிஸின் மியன்மார் பயணம் இடம்பெற்றுள்ளது


Comments
Post a Comment