பொலன்னறுவை,தம்பாள அல் மதீனா கனிஷ்ட பாடசாலை மாணவர்கள் மூவருக்கு பதக்கங்கள் வழங்கி கௌரவிப்பு.

Ariff S Naleem

வட மத்திய மாகாண கல்வித்திணைக்களம் ஏற்பாடு செய்திருந்த சாதனை மாணவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு இன்று 05/12/2017 காலை அநுராதபுர இளைஞர் மன்ற கேட்போர் கூடத்தில் வடமத்திய மாகாண ஆளுனர் P.B. திசானாயக்க அவர்களின் தலைமையில் நடைபெற்றது ,இதன் போது கடந்த ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரிட்சையில் மாகாண மற்றும் மாவட்ட ரீதியில் முதலிடத்தை பெற்ற தம்பாள அல் மதீனா கனிஷ்ட பாடசாலை மாணவர்களான 
M R இப்லால் முஹிடீன் 
A R மொஹமட் அத்னான்
H சாதிக்
ஆகியோருக்கு 
வட மத்திய மாகாண கௌரவ ஆளுனர் P.B திசானாயக்க பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி வைத்தார்.
படத்தில் குறித்த சாதனை மாணவர்களையே காண்கிறீர்கள்.
இம் மாணவர்களுக்கு கல்வி புகட்டிய ஆசிரியை M F சித்தி நிஷா. அல் மதீனா கனிஷ்ட பாடசாலை அதிபர்
A.L.இப்றாலெப்பே ஆகியோருக்கு பிரதேச பெற்றோர்கள் நலன்விரும்பிகள் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறார்கள்.

Comments