மூதூர்: வீதியை செப்பனிடக் கோரிக்கை
மூதூர் பிரசேத சபை எல்லைக்குட்பட்ட, தோப்பூரிலிருந்து பள்ளிக்குடியிருப்பு வரைச்செல்லும் பிரதான வீதியை செப்பனிடுமாறு மாவட்ட மற்றும் தேசிய அரசியல் வாதிகள் பலரிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் இன்னும் செப்பனிடப்படாத நிலை காணப்படுவதால் இப்பகுதி பிரயாணிகள் மற்றும் பாதசாரிகள் பல்வேறு அசௌகரியங்களை எதிர் நோக்கி வருவதாக கவலை தெரிவிக்கின்றனர்.
சேர்ந்த தோப்பூர் வாகன சுற்று வட்டாரப் பகுதியிலிருந்து பள்ளிக்குடியிருயு வரைச்செல்லும் பிரதான வீதி இவ்வாறு குன்றும் குழியுமாகக் காணப்படுகின்றது
மழை காலத்தில் மழை நீர் குழிகளில் தேங்கி இவ் வீதிகள் வெள்ளக்காடாகவும் சேறும் சகதியுமாகவும் மாறுவதால், இவ் வீதியூடாக வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் பிரயாணம் செய்யமுடியாதிருப்பதாக கவலை தெரிவிக்கின்றனர்
இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கும் அசௌகரியத்துக்கும் மத்தியில் இவ் வீதியூடாகப் பயணிக்கிறார்கள்,இவ் வீதியை தினமும் தோப்பூர் அல்லை நகர், மற்றும் பள்ளிக்குடியிருப்பு உள்ளிட்ட ஏனைய பகுதிகளுக்கும் சென்றுவர வேண்டிய பொதுமக்களும் பாடசாலை மாணவர்களும் இவ் வீதியை பயன்படுத்தும் பிரதான வீதியாக இது காணப்படுகிறது, இனியாவது உரிய பகுதியினர் இவ் வீதியை புனரமைப்பது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டூமென பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Comments
Post a Comment