முள்ளிப்பொத்தானை பாலர் பாடசாலைகளின் வருடாந்த கலை விழா.


எப்.முபாரக்   

 முள்ளிப் பொத்தானைப் பிரதேசத்தில் இருக்கின்ற ஐந்து முன்பள்ளிகள் சேர்ந்து நடாத்திய வருடாந்த கலை,கலாச்சார நிகழ்வு கிண்ணியா அல் ஹிஜ்ரா மத்திய கல்லூரி கேட்போர் கூடத்தில் நேற்று இடம் பெற்றது. 
   
இந்நிகழ்வுக்கு பிரதம அதீதியாக கிண்ணியா நகர சபையின் முன்னால் மேயர் Dr.ஹில்மி மஹ்ரூப் அவர்கள் கலந்து கொண்டதுடன் அதீதிகளாக தம்பலகாமப் பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் திருமதி சந்ராவதி அவர்களும் மற்றும் ஏ.எம்.சமீம் ,பாடசாலை அதிபர் எச்.ஏ.மஹ்ரூப்  சட்டத்தரணி சவுர்தீன் மற்றும் ,கிராம முன்னேற்ற சங்கத் தலைவர்கள்   பெற்றோர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர் .

இதன் போது மாணவர்களின் கலை கலாசார நிகழ்வுகள் இடம் பெற்றதுடன் மாணவர்களுக்கான  பரிசில்களும்,சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டது.  


Comments