முகம்மது நபியின் பிறந்த நாளை முன்னிட்டு கொழும்பில் சிறப்பு தொழுகை

உலகளாவிய ரீதியில் முஸ்லிம் மக்கள் நேற்று முகம்மது நபியின் பிறந்த நாளை வெகு சிறப்பாக கொண்டாடினார்கள்

இந்த நிலையில் கொழும்பில் நேற்றையதினம் பல பள்ளிவாசல்களில் சிறப்புத் தொழுகை வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன.

இதில் கலந்துகொண்ட அனைத்து இஸ்லாமியர்களும், நாட்டில் உள்ள அனைத்து மக்களிடத்தில் சாந்தியும், சமாதானமும், சகோதரத்துவமும் நிலவ வேண்டும் என தெரிவித்துள்ளார்கள்.

மேலும், அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் சங்க பேரவையின் வருடாந்த மீலாத் விழா வைபவம் அதன் தலைமையகத்தில் நேற்று  இடம்பெற்றிருந்தது.

இந்நிகழ்வானது, பலஸ்தீனத்திற்கான இலங்கை தூதுவர் பஸ்சான் அன்வர் தலைமையில் இடம்பெற்றிருந்தது. இதில் முஸ்லிம் மக்கள் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்வின்

Comments