தமிழ் முஸ்லிம் ஐக்கிய மாநாடு மிகச்சிறந்த ஆரம்பம். எம்.ஏ.சுமந்திரன் (பா.உ)
n.m. abdullah

வடக்கின் மக்களாக எழுவோம்; என்கின்ற தொனிப்பொருளில் டிசம்பர் 10ம் நாள் வடக்கு முஸ்லிம் மக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட தமிழ் முஸ்லிம் ஐக்கிய மாநாடு இன்றைய தினம் வெற்றியடைந்திருக்கின்றது. கிட்டிய காலங்களில் தமிழ் அரசியல் கட்சியொன்றின் அழைப்பிற்கு பெருந்திரளான வடக்கு முஸ்லிம்கள் ஒன்றுகூடியிருப்பது இதுவே முதலாவது சந்தர்ப்பம் என நான் கருதுகின்றேன். தமிழ் முஸ்லிம் உறவினை மேம்படுத்தும் நோக்கிலேயே சகோதரன் அஸ்மின் அவர்களுக்கு நாம் வடக்கு மாகாணசபையிலே ஒரு உறுப்புரிமையினை வழங்கியிருந்தோம், அவர் மிகவும் சிறப்பாக செயற்பட்டார் என்பது எமக்குத் தெரியும், ஆனால் இன்றைய சந்திப்பின் மூலம் அது வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றது. இரண்டு சமூகங்களினதும் ஐக்கியமே பிராந்தியத்தின் அமைதிக்கும், நிலைபேறான அபிவிருத்திக்கும், எமது அடிப்படை உரிமைகளை வென்றெடுப்பதற்கும் வழிசெய்யும், அந்தவகையில் தமிழ் முஸ்லிம் ஐக்கிய மாநாடு மிகச் சிறந்த ஆரம்பமாகவே அமைந்திருக்கின்றது என நான் குறிப்பிட விரும்புகின்றேன் என யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் தெரிவித்தார்.
மேற்படி மாநாட்டிலே வடக்கு முஸ்லிம் மக்கள் எட்டு அம்சத் தீர்மானங்களையும் நிறைவேற்றியிருந்தமை குறிப்பிடத் தக்கது. அத்தீர்மானங்கள் வருமாறு
v வடக்கு முஸ்லிம் மக்களாகிய நாம் வடக்கிலே பூர்வீகமாக வாழ்கின்ற இந்து, கிறிஸ்த்தவ, இஸ்லாமிய, பௌத்த மக்களிடையே நிலைத்துநிற்கும் அமைதிக்கும், சமாதானத்திற்கும், சகவாழ்விற்கும், நல்லிணக்கத்திற்கும் அர்ப்பணத்தோடு செயற்படுவோம் என உறுதி பூணுகின்றோம். அதுவே இப்பிராந்தியத்தின் நிரந்தர அமைதிக்கான அடிப்படை என்றும் நம்புகின்றோம்.
v வடக்கு முஸ்லிம்களினதும் தாயகமே என்ற அடிப்படையில்; அவர்களது இருப்பு, காணிகளின் மீதான உரித்து, அரச காணிகளைப் பெற்றுக்கொள்வதற்கான உரித்து, மற்றும் அனைத்து அடிப்படை உரிமைகளும் நடைமுறை ரீதியில் பேணப்பட்டு, பலவந்த வெளியேற்றம் போன்ற மனித உரிமை மீறல்கள் மீளவும் நிகழாமை. உறுதிசெய்யப்படுதல் அவசியமாகும்.
v சட்டத்தின் முன்னால் அனைவரும் சமமானவர்கள் என்ற அடிப்படையில்; அரச சேவைகளை எவ்வித புறக்கணிப்புகளுமின்றி பெற்றுக்கொள்வதற்கான முழுமையான உத்தரவாதம், வதிவிடம், வாழ்வாதாரம், கல்வி, சுகாதாரம், சமய, கலாசார, சமூக, பொருளாதார, மற்றும் இதர சேவைகளைப் பெற்றுக்கொள்வதில் எவ்வித பாரபட்சமுமற்ற நிலை பேணப்படுதல் அவசியமாகும்.
v வடக்கு முஸ்லிம் மக்கள் மீள்குடியேறுகின்ற மக்கள் என்ற அடிப்படையில் அவர்களது நிலைபேறான மீள்குடியேற்றத்தை உறுதிசெய்யும் வகையிலான குறுகியகால கொள்கை நடைமுறைகளும், அரச நிர்வாக நடைமுறைகளும் ஒழுங்கமைக்கப்படுதல் அவசியமாகும்.
v வடக்கு முஸ்லிம் மக்களாகிய நாம் இந்த நாட்டின் இறைமை அதிகாரத்தை பேணியவர்களாக, எமது நாட்டின் ஐக்கியம், சமாதானம், நிலைபேறான அபிவிருத்தி என்பவற்றின் மீதான சர்வதேச சமூகத்தின் முழுமையான ஒத்துழைப்புக்களை முழுமையாக வரவேற்கின்றோம்.
v வடக்கு முஸ்லிம் மக்களாகிய நாம் இலங்கைத் திருநாட்டிற்கு அனைத்து மக்களாலும் ஏற்றுக்கொள்ளத்தக்க புதிய அரசியலமைப்பொன்றின் அவசியத்தை வலியுறுத்துகின்றோம்; அது இந்த நாட்டின் அனைத்து மக்களையும் சமத்துவத்தோடு வழிநடாத்தக்கூடியதாக இருத்தல் வேண்டும்.
v இந்த நாடு பிரிபடாத ஒருமித்த நாடு என்பதோடு இந்த நாட்டின் அனைத்து மக்களுக்கும் மீளப் பெற்றுக் கொள்ள முடியாத அதிகாரப் பரவலாக்கம் வழங்கப்படுகின்ற அதேவேளை கிழக்கு மாகாண மக்களின் விருப்பத்துடன் வடக்கு கிழக்கு இணைப்பு இடம்பெறுவது இலங்கையின் சிறுபான்மை மக்களுக்கு பலம் சேர்க்கும் அம்சமாக அமையும்.
v வடக்கு முஸ்லிம்கள் சார்பிலே இவ்விடத்திலே ஒன்றுகூடியிருக்கின்ற நாம் எமது ஜனநாயக உரித்தின் அடிப்படையில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொள்கைகளையும் வழிமுறைகளையும் ஏற்று, முஸ்லிம் மக்களும் அங்கத்தவர்களாக இணைந்து “இலங்கைத் தமிழரசுக் கட்சி முஸ்லிம் வட்டம்” என்ற ஒழுங்கிலே செயலாற்ற வாய்ப்பளிக்கப்படல் அவசியமாகும்.
வடக்கிலே தமிழ் முஸ்லிம் மக்களுக்கிடையிலான செழிப்பான உறவுகளே வடக்கு முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வாக அமையும் என்பது எனது நம்பிக்கை. அந்த நம்பிக்கையின் அடிப்படையில்தான் வடக்கு முஸ்லிம் மக்களுக்கான அரசியல் கொள்கைகள் உருவாக்கம் அமையப்பெற்றுள்ளன. அந்தக் கொள்கைகளின் மீது நம்பிக்கை வைத்தவர்களாக, அதனை நிறைவேற்ற வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்களாக இன்றைய தினம் இந்த அரங்கிலே ஒன்றுகூடி எமது கொள்கைசார் தீர்மானங்களை முன்மொழிகின்றோம் எனவும் மாநாட்டில் ஒன்றுகூடிய மக்கள் கூறிநின்றனர்.
தகவல் எம்.எல்.லாபிர்

Comments
Post a Comment