ஆரையம்பதியில் விபத்து: மூன்று உயிர்கள் சம்பவ இடத்தில் பலி

தமிழ்வின்

மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஆரையம்பதி பகுதியில் இன்று அதிகாலை கனரக வாகனத்தில் மோதி இளம் கன்று உட்பட மூன்று மாடுகள் சம்பவ இடத்தில் பலியாகியுள்ளன.

ஆரையம்பதி பிரதேச சபைக்கும், ஆரையம்பதி பிரதேச வைத்தியசாலைக்கும் முன்பாக உள்ள பிரதான வீதியில் இந்த கோர விபத்து இடம்பெற்றுள்ளது.

ஆரையம்பதி பிரதேச சபைக்குட்பட்ட மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் கட்டாக்காலி கால் நடைகளின் நடமாட்டம் அதிரித்துள்ளதாக குற்றச்சாட்டுக்கள் பதிவாகியிருந்தன.

இந்த நிலையில் அதிகாரிகளினதும், கால்நடைகளின் உரிமையாளர்களினதும் அசமந்த போக்கே கால் நடைகள் இவ்வாறு உயிர் இழப்பதற்கு காரணமாக அமைகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments