சாதாரண தரப் பரீட்சை மாணவர்களுக்கு ஓர் முக்கிய அறிவித்தல்
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி சனத் பூஜித்த கூறியுள்ளார்.
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நாளை மறுதினம் ஆரம்பமாகவுள்ளது.
பரீட்சை நடைபெறும் அனைத்து மத்திய நிலையங்களுக்கும் வினாப்பத்திரங்களை விநியோகிக்கும் நடவடிக்கைகள் இன்றைய தினம் ஆரம்பமாகின.
இதேவேளை, பொலிஸ் மற்றும் திணைக்களத்தின் அதிகாரிகளின் கண்காணிப்பின் கீழ் இந்த நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி சனத் பூஜித்த குறிப்பிட்டுள்ளார்.


Comments
Post a Comment