கிண்ணியாவில் கேரளா கஞ்சாவுடன் இளைஞர் கைது.

எப்.முபாரக்   

கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு - திருகோணமலை பிரதான வீதியின் பீச் ஹோட்டலுக்கு முன்னால் வைத்து பதின் மூன்று கிராம் கேரளாக் கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் நேற்று (09) இரவு இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளாரென திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி எஸ்.ஐ விஜேசிங்க தெரிவித்தார்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து சோதனையிட்ட போது திருகோணமலை லிங்க நகரைச் சேர்ந்த 23 வயது இளைஞனே கைதுசெய்யப்பட்டவராவார்.

கைது செய்யப்பட்டவர்  கேரளாக் கஞ்சாவுடன்  கிண்ணியா பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளாரெனவும் திருகோணமலை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் கிண்ணியா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.    

Comments