யானை வெடி வைத்து விரட்டப்பட்ட சிறுத்தைகள்

கொட்டகலை, ரொசிட்டா தோட்ட தேயிலை மலைப்பகுதியில் உள்ள சிறுத்தைகளை யானை வெடி வைத்து விரட்டும் நடவடிக்கையில் நுவரெலியா வனவிலங்கு அதிகாரிகள் இன்றைய தினம் ஈடுபட்டனர்.

கொட்டகலை, ரொசிட்டா தோட்ட பகுதியில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளமையினால் தொழிலாளர்கள் பெரும் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில், கடந்த 11ஆம் திகதி சிறுத்தைத் தாக்குதலுக்கு உள்ளாகிய தொழிலாளி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் தோட்ட நிர்வாகம் கவனத்திற்கொள்ளவில்லை என நேற்றைய தினம் அப்பகுதி மக்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததுடன் லிந்துலை பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்திருந்தனர்.

இதனையடுத்து நுவரெலியா வனவிலங்கு அதிகாரிகள் ரொசிட்டா தோட்டத்திற்கு வருகைத்தந்து பொதுமக்களுடன் இணைந்து யானை வெடி வைத்து சிறுத்தையை விரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

Comments