யாழ்மாநகர குப்பைகளை அடித்துச் சென்ற வெள்ளம்
யாழ்ப்பாணம் மாநகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில்நேற்று(11) ஒரளவு மழை வீழ்ச்சி பதிவாகியது.
சில மணிநேரம் நீடித்த மழையால் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டது.
யாழ்ப்பாண மாநகர சபையின் கழிவகற்றல் பிரிவால் சீராக கழிவுகள் அகற்றப்படாத இடங்களில் தேங்கிக்கிடந்த குப்பைகள் வெள்ளத்தில் அள்ளுண்டு சென்றால் வீதிகளில் பரவிக்கிடந்தன.
இவ்வாறு வெள்ளத்தில் பரவிய குப்பைகளிலிருந்து நாளை துர்நாற்றம் கிளம்பும் என மக்கள் விசனம் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம் நகர் யாழ் வீதியோரம் தேங்கிக் கிடந்த குப்பைகள் வெள்ளத்தால் வீதியில் பரவியதால் அப்பகுதிக் குடியிருப்பாளர்களும் அந்த வீதியால் பயணிப்பவர்களும் பெரும் அசெளகரியங்களை எதிர்கொள்கின்றனர்

Comments
Post a Comment