கிண்ணியா தளவைத்தியசாலை வைத்தியர்கள் பணி பகிஷ்கரிப்பால் மக்கள் அவதி
கிண்ணியா தளவைத்தியசாலையின் வைத்தியர்கள் மேற்கொண்ட பணி பகிஷ்கரிப்பால் இன்று(12) மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
குறிப்பாக வெளிநோயாளர் பிரிவு முற்று முழுதாக வெறிச்சோடிக் காணப்படுகிறது.
இதனால் நோயாளிகள் தூரப் பிரதேசங்களில் இருந்து வந்து வெறுங்கையுடன் வீட்டுக்கு திரும்புகின்றனர்.
இது தொடர்பில் வைத்திய அத்தியகட்சகரை தொடர்பு கொண்டு கேட்டபோது சுகாதார அமைச்சின் முறையற்ற நியமனத்தால் கிண்ணியா தளவைத்தியசிலை வைத்தியரொருவரை இழந்து நிற்கின்றது.
இதனை சுலபமாக தீர்ப்பதற்கு ஆக்கபூர்வமான பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும் அவை அனைத்தும் தோல்வியுற்ற நிலையில் எமது உண்மையான கோரிக்கையினை சுகாதார அமைச்சிற்கு உணர்த்துவதற்காக எமது வைத்திய அதிகாரிகள் பணிபகிஷ்கரிப்பில் இன்று ஈடுபட்டுள்ளதாக கிண்ணியா தளவைத்தியசாலையின் வைத்திய அத்தியகட்சகர் டொக்டர் சதீஸ் பவலேந்திரன் தெரிவித்தார்.

Comments
Post a Comment