தமிழ் தேசியச் கூட்டமைப்பின் மூன்று கட்சிகள் ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளன
இதன்போது தழரசுக் கட்சி, டெலோ, புளொட் ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகளான மாவை சேனாதிரபஜா, சுமந்திரன், சிவாஜி லிங்கம், சித்தார்த்தன், வியாழேந்திரன், செல்வம் அடைக்கல நாதன், விநோ நோகராக லிஙக்கம், டெலா இயக்கத்தின் செயலாளர் நாயகம் சிறிகாந்தா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர். இவர்கள் தற்போது ஏற்பட்டுள்ள குழப்ப நிலைமைகளில் தமிழ் மக்களின் பல்வேறுபட்ட பிரச்சினைகள் உள்ளிட்ட பல விடயங்களை கதைத்துள்ளனர்.
இதன்படி இக்கட்சிகள் ஒரு சமரச இணக்கப்பட்டுக்கு வந்து தமிழரசுக் கட்சி, டெலோ, புளொட் ஆகிய மூன்று கட்சிகளும் இம்முறை வீட்டுச் சின்னத்தில் ஒரே கூரையின் கீழ் தேர்தலில் களமிறங்குவதாக முடிவு எட்டப்பட்டுள்ளது. இக்கட்சிகளுக்குள் பல்வேறுபட்ட பிரச்சினைகள் இருக்கின்ற போதிலும் தமிழ் மக்களின் அபிலாசைகளை கருத்திற் கொண்டு இந்த இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாக அக்கட்சிகளின் பிரதி நிதிகள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர் தெரிவித்துள்ளனர்.


Comments
Post a Comment