கனடா வாழ் இலங்கையரின் குற்றச்சாட்டிற்கு பதிலளித்த பேஸ்புக்

பேஸ்புக் உட்பட சமூக வலைத்தளங்கள் சமூகத்தை சீரழிப்பதாக இலங்கையர் ஒருவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

பேஸ்புக் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரியாக செயற்பட்ட இலங்கையரே இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

சமத் பஹிபிட்டிய என இந்த அதிகாரி இலங்கையில் பிறந்து 5 வயதில் கனடாவில் குடியேறிய ஒருவராகும்.

கடந்த மாதம் சுமத்திய குற்றச்சாட்டிற்கு இந்த வாரம் இணையத்தளம் ஊடாக பதில் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 6 வருடங்களுக்கு முன்னர் பஹிபிட்டிய பேஸ்புக் நிறவனத்தை விட்டு விலகியதாக பேஸ்புக் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் அவர் பேஸ்புக் நிறுவனத்திற்காக ஆற்றிய பணி அளப்பெரியது. பேஸ்புக்கினை மேலும் வளர்ச்சியடைய செய்வதற்காக கடுமையாக உழைக்கவுள்ளதாகவும் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

பேஸ்புக் ஊடாக சமூகத்திற்கு ஏற்படும் பாதிப்பு தொடர்பில் வெளித்தரப்பு நிபுணர்களுடன் இணைந்து ஆய்வுகளை மேற்கொள்வதாக அதன் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

Comments