இலங்கை அகதிகளின் மோசமான செயல்: மடக்கிப்பிடித்த பொது மக்கள்

சென்னை - புழல் பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த இரு இளைஞர்கள் வழிப்பறியில் ஈடுபட்ட குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட மூவரை பொதுமக்கள் துரத்திச் சென்ற நிலையில், இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த 32 வயதுடைய தீபகாந்தன் மற்றும் 23 வயதுடைய மைந்தன் என்போரை மடக்கிப் பிடித்து பொலிஸில் ஒப்படைத்துள்ளனர்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

கும்மிடிப்பூண்டியை அடுத்த சூரவாரிகண்டிகை பகுதியைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளியான நாகேஷ் என்பவர் வீதியில் நின்று கொண்டிருந்தார்.

இதன்போது அப்பகுதியில் வந்த மர்ம ஆசாமிகள் மூன்று பேர் அவரை மிரட்டி தொலைபேசியை பறிக்க முயற்சித்துள்ளனர்.

இதையடுத்து நாகேஷ் சத்தம் போட்டதைத் தொடர்ந்து குறித்த மர்ம நபர்கள் அவ்விடத்தை விட்டு தப்பிச் செல்ல முயற்சித்துள்ளனர்.

அவர்களை துரத்திப்பிடிக்கும் போது ஒருவர் தப்பிச் சென்றுள்ளதுடன், இருவர் பொது மக்களிடம் சிக்கிக்கொண்டனர்.

சிக்கிக்கொண்ட இருவரையும் கும்மிடிப்பூண்டி சிப்காட் பொலிஸ் நிலையத்தில் பொது மக்கள் ஒப்படைத்துள்ளனர்.

இவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளில் இருவரும், சென்னையை அடுத்த, புழல் பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

இவர்கள் மீது வழிப்பறி தொடர்பான வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

Comments