முள்ளிப்பொத்தானையில் பல்வேறு துறைகளிலும் சாதனை படைத்தவர்களை கௌரவிக்கும் நிகழ்வு.

எப்.முபாரக் 

கிண்ணியா கல்வி வலயத்துக்கு உட்பட்ட முள்ளிப்பொத்தானை பகுதிக்குட்பட்ட பல்வேறு துறைகளிலும் திறமையை வெளிப்படுத்திய  சாதனையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு புதன்கிழமை(6) இரவு    7.30மணியளவில் முள்ளிப்பொத்தானை மத்திய கல்லூ மண்டபத்தில் முள்ளிப்பொத்தானை கோட்டம் பாடசாலைகள்   அதிபர் சங்கத்தின் தலைவர்  பீ எம் அப்துல் றவூப் தலைமையில் நடைபெற்றது.  

  நிகழ்வுக்கு பிரதம அதிதீயாக கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர்  எம்.ரீ.எம்.நிஷாம் கலந்து கொண்டு சிறப்பித்து சாதனையாளர்களுக்கு சான்றிதல் வழங்கி கௌரவிக்கப்பட்டதோடு,
முன்னால் முள்ளிப்பொத்தானை கோட்டக் கல்வி அதிகாரி ஏ ஆர் எம் சுபைரை  அதிபர் சங்கத்தினால் பொன்னாடை போற்றி கௌரவிக்கப்பட்டார். 

இந்நிகழ்வுக்கு முள்ளிப்பொத்தானை கோட்டத்திற்குட்பட்ட  அதிபர்கள், ஆசிரியர்கள் ,நலன் விரும்பிகள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.

Comments