ஜெரூசலம் என்பது பலஸ்தீனர்களின் தார்மீக தலைநகரம் எனவும் அமெரிக்கா அதனை இஸ்ரேலுக்கு தாரை வார்க்க நினைப்பது விளைவுகளை ஏற்படுத்தும் கிழக்கு மாகாண முன்னால் முதலமைச்சர் தெரிவிப்பு.

Mubarak

அமெரிக்க ஜனாதிபதியின் இந்த அறிவிப்புஉலகளாவிய இஸ்லாமியர்களின்உணர்வுகளை சீண்டிப் பார்ப்பதாகஅமைந்துள்ளதாகவும் கிழக்கின்முன்னாள்முதலமைச்சர் நசீர் அஹமட் கூறினார்.

ஜெரூசலத்தை இஸ்ரேலின் தலைநகராகஅங்கீகரிப்பதாக அமெரிக்க ஜனாதிபதிடொனல்ட் ட் ரம்ப் அறிவித்துள்ளதற்கு உலகநாடுகள் எதிர்ப்புத் தெரிவித்து வரும்நிலையிலேயே கிழக்கு மாகாணத்தின்முன்னாள் முதலமைச்சர் நசீர் அஹமடகுறிப்பிட்டார்,

மேலும் கருத்து தெரிவித்த முன்னாள்கிழக்கின் முதலமைச்சர்:

இஸ்ரேல் ஒரு அங்கீகரிக்கப்பட்ட தேசம்அல்ல ,அவர்கள் பலஸ்தீனில் வாழும்அப்பாவி முஸ்லிங்களின் இடங்களை அபகரித்து பலாத்காரமாக வாழ்ந்து வருவதாவே  இஸ்லாமியர்களான நாம் கருதுகின்றோம்,
இதன்  மூலம்   மத்திய  கிழக்கில்   அமைதியை நிலை நாட்டுவதாகதெரிவிக்கும்   அமெரிக்காவின் கொள்கை   போலியானது  என்பது  இந்த  தீர்மானம்  மூலம் தெரிய வருகின்றது.

இஸ்ரேலின்   தலைநகராக ஜெரூசலத்தை  அங்கீகரிப்பதாக   அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்திருப்பதானது   மத்திய கிழக்கில் மேலும் மோதல்களை  அதிகரிக்கவே  வழி வகுக்கும்,
இஸ்ரேலினால்  பலவந்தமாக  ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலப்பரப்பை  ஐக்கிய நாடுகள் சபையோ எனைய  சர்வதேச நாடுகளோ  அங்கீரிக்காத நிலையில்  அமெரிக்கா அங்கீகரித்திருப்பதானது சர்வதேச  ரீதியலான நாடுகளிடையேயான  உறவில்  விரிசலை  ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது,
பலஸ்தீன மக்களின்  மனித  உரிமைகள்  மீறப்படுவதையோ  அப்பாவி  உயிர்கள் கொல்லப்படுவதை நிறுத்துவதற்கோ  அமெரிக்கா முன்வராமல் மேலும்  அவற்றை அதிகரிக்கும் விதமாக நடந்து கொள்வது ஏற்றுக்கொள்ள முடியாது

அத்துடன் 1993ஆண்டு  தலைநகர்  குறித்த  தீர்மானங்கள் பேச்சுவார்த்தையின்மூலம் மாத்திரமே  தீர்வு  எட்டப்படும் என ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ள நிலையில்  அமெரிக்க ஜனாதிபதியின் தீர்மானம்   கண்டிக்கத்தக்கது,
பலஸ்தீனர்களுக்கு  எதிராக  இழைக்கப்பட்டுள்ள  இந்த அநீதிக்கு எதிராக  இலங்கை   முஸ்லிம்  அரசியல்    தலைமைகள்  இணைந்து  கண்டனத்  தீர்மானமொன்றை நிறைவேற்றஅரசாங்கத்தினை வலியுறுத்த வேண்டும்  என கிழக்கு மாகணத்தின் முன்னாள்  முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் குறிப்பிட்டார்.

Comments