பரீட்சை எழுதிவிட்டு வெளியில் வந்த மாணவர்கள் கண்ட பயங்கரம்! இளைஞன் படுகாயம்
ஐந்தாம் தர புலமைப் பரீட்சை நடைபெற்ற பரீட்சை மண்டபத்திற்கு அருகில் இடம்பெற்ற குடும்ப சண்டையில் பொறியியலாளரான இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
படுகாயமடைந்து இளைஞன் தம்புள்ளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காயமடைந்த இளைஞனின் சகோதரியின் மகள் இன்று ஐந்தாம்தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றியிருந்தார்.குறித்த தனது அம்மா, பாட்டி மற்றும் மாமா ஆகியோருடன் பரீட்சை மண்டபத்திற்கு வந்துள்ளார்.
இந்த நிலையில், பரீட்சை முடிவடையும் நேரம் சிறுமியின் தாய் பாடசாலையின் நுழைவாயிலுக்கு அருகில் சென்றுள்ளார்.அந்த நேரத்தில் அவளுடைய கணவர் மறைந்திருந்து ஒரு கூர்மையான ஆயுதத்தால் அவளைத் தாக்க முற்பட்டபோது, அந்த சகோதரன் அதனைத் தடுக்க முயன்றுள்ளார்.
இந்த நிலையில் குறித்த இளைஞன் கத்திக்குத்து இலக்காகி படுகாயமடைந்துள்ளார். ஐந்து தடவைகள் குறித்த இளைஞன் கத்திக்குத்துக்கு இலக்காகி உள்ளார்.எனினும், பரீட்சையின் போது கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் உடனடியாக குறித்த இளைஞனைக் காப்பாற்றியுள்ளனர்.
கத்தியால் குத்திய நபர் அதிக மதுபோதையில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த சிறுமியின் தாய் தனது கணவனை விட்டு வெளிநாட்டுக்குச் சென்றுள்ளார். தனது மகளின் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்காக கடந்த 2 ஆம் திகதி இலங்கைக்கு வந்துள்ளார்.இந்த சம்பவம் காரணமாக பரீட்சை மண்டபத்திலிருந்து மாணவர்கள் கடும் பீதியில் வெளியே சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.


Comments
Post a Comment