கண்டி - திருகோணமலை பிரதான வீதியில் வாகன விபத்து
கண்டி - திருகோணமலை பிரதான வீதியில் வான் ஒன்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்து இன்று தம்பலகாமப் பிரதேச செயலகத்துக்கு முன்னால் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கண்டி, திருகோணமலை பிரதான வீதியில் திருகோணமலையை நோக்கி வந்த வானும், குறித்த பகுதியில் உள்ள வீடொன்றினுள் இருந்து வெளியே எடுக்கப்பட்ட முச்சக்கரவண்டியுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது, முச்சக்கரவண்டி குடை சாய்ந்துள்ளதாகவும், இதில் எவருக்கும் பாதிப்புக்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


Comments
Post a Comment