சிறுமியை துஷ்பிரயோகம் செய்த சிறிய தந்தைக்கு நீதிபதி இளஞ்செழியன் கொடுத்த தண்டனை
திருகோணமலை - அத்தாபெந்திவெவ பகுதியில் 11 வயது சிறுமி ஒருவரை துஸ்பிரயோகம் செய்த சிறிய தந்தைக்கு 20 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து இன்று நீதிபதி மா. இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார்.
கடந்த 2004.06.21ஆம் ஆண்டு பெற்றோர் இருவரும் வீட்டில் இல்லாத சமயத்தில் குறித்த சிறுமியை அவரது சிறிய தந்தை பலாத்காரம் செய்து துஸ்பிரயோகம் செய்துள்ளார்.
இது தொடர்பான வழக்கு திருகோணமலை மேல் நீதிமன்றில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் 10,000 ரூபா தண்டபணமும் வழங்கவேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் ஒரு மாதம் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும், இதேவேளை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஐந்து இலட்சம் ரூபாய் நஸ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
சட்டமா அதிபர் திணைக்களத்தினால் மேல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட இவ்வழக்கின் எதிரி தலைமறைவாகியுள்ளார். வழக்கு விசாரணைகளில் அவரை பொலிஸார் முன்னிலை படுத்தியிருக்கவில்லை.
இதனால் குற்றவாளியை உடன் தேடிப்பிடித்து தண்டனைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கின் முக்கிய சாட்சிகளாக பாதிக்கப்பட்ட குழந்தை, மற்றும் குழந்தையின் தாயாரும், வைத்திய அதிகாரியின் சாட்சியமும் கவனிக்கப்பட்டது.
அத்தாபெந்திவெவ பகுதியைச் சேர்ந்த சமிந்த பண்டார திசாநாயக்க என்பவரே சிறுமியை துஸ்பிரயோகம் செய்துள்ளார் என்பது சந்தேகத்திடமின்றி மன்றில் நிரூபணமாகியநிலையிலும், குற்றவாழி மன்றில் ஆஜராகாமல் தலைமறைவாகியுள்ள நிலையிலும் இந்த தீர்ப்பை நீதிபதி மா. இளஞ்செழியன் வழங்கியுள்ளார்.



Comments
Post a Comment