Skip to main content
சி.டி.வி கமரா மூலம் சிக்கிய இளைஞனுக்கு நீதவான் கொடுத்த உத்தரவு
குறித்த உத்தரவை திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா இன்று பிறப்பித்துள்ளார்.
திருகோணமலை 03ஆம் கட்டை சோலையடி பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய ஏ.ஜே.முகம்மட் அணஸ் என்பவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.சம்பவம் குறித்து தெரியவருவதாவது,திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியில் இருந்த பணப்பையை திருடி, அதிலிருந்த வங்கி அட்டையை எடுத்து 70 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டமை தொடர்பில் முச்சக்கரவண்டி உரிமையாளர் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்த முறைப்பாட்டை அடுத்து குறித்த வங்கியின் சி.சி.டி.வி கமராவின் மூலம் பெறப்பட்ட புகைப்படத்தை அடிப்படையாக வைத்து சந்தேகநபரை கைது செய்திருந்ததாக துறைமுக பொலிஸார் தெரிவித்தனர்.இதேவேளை இந்த நபர் மீது பல குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாகவும் நீதவான் முன்னிலையில் பொலிஸார் தெரிவித்தனர்.திருகோணமலை துறைமுக பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளில் திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
Comments
Post a Comment