கந்தளாய் நகர மண்டபத்தை திறந்து வைக்கவுள்ள ஜனாதிபதி

கந்தளாயில் கிழக்கு மாகாண ஆளுநரின் தலைமையில் நடைபெறவுள்ள நிகழ்வொன்றில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொள்ளவுள்ளார்.


இதன்போது, 70 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட கந்தளாய் நகர மண்டபமே ஜனாதிபதியால் நாளைய தினம் பிற்பகல் திறந்து வைக்கப்படவுள்ளது.


இதேவேளை குறித்த நிகழ்வின் போது கிழக்கு மாகாணத்தை சேர்ந்த பட்டதாரிகள் 160 பேருக்கு நியமனம் வழங்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

Comments