திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிவத்த பாலம் கண்டல் காட்டுப்பகுதியில் தூக்கில் தொங்கியுள்ளார்
எப்.முபாரக்
திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிவத்த பாலம் கண்டல் காட்டுப்பகுதியில் 55 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்டுள்ளதாக தம்பலாகாமம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் இன்று(8) பகல் நடைபெற்றுள்ளதாகவும், சடலம் யாரு,என்பதை அடையாளம் காண முடியாதுள்ளதாகவும்,மரத்தில் கயிற்றினால் கட்டி தூக்கில் தொங்கியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சடலம் தம்பலாகாமம் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு,சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பலாகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




Comments
Post a Comment