Skip to main content
ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும்! மைத்திரியிடம் கோரிக்கை

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதியின் பொது மன்னிப்பு வழங்குவது தொடர்பில் அரசாங்கமும் ஜனாதிபதியும் நேரடியான தீர்மானம் ஒன்றை எடுக்க முடியும் என இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். பொதுமன்னிப்பு வழங்க ஜனாதிபதி விரும்பவில்லை என்றால், அது குறித்து இரண்டு முறை சிந்திக்க வேண்டும்.
பிக்கு ஒருவர் பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியோ, கொள்ளையில் ஈடுபட்டிருந்தாலோ ஜனாதிபதியிடம் மன்னிப்பு வழங்குமாறு கோர மாட்டோம்.
எனினும் நாட்டுக்காகவும் இனத்திற்காகவும் படையினருக்காகவும் குரல் கொடுத்தவருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கவில்லை என்றால் அது தேசிய குற்றம்.
ஜனாதிபதி பொது மன்னிப்பை வழங்கும் இடத்திற்கு கொண்டு வருவதற்காக நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் சத்தாதிஸ்ஸ தேரர் குறிப்பிட்டுள்ளார்.
x
Comments
Post a Comment