Skip to main content
யாழில் இருந்து திருகோணமலைக்கு கொண்டுவரப்பட்ட கேரள கஞ்சா! மூவர் கைது
திருகோணமலை - யாழ்ப்பாணம் வீதியில் வைத்து மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த மூவரும் கேரள கஞ்சா கொண்டு வந்த நிலையில், கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து மூன்று கிலோ 750 கிராம் கேரள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் உப்புவெளி பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலைக்கு கஞ்சா போதைப்பொருள் கொண்டு வந்த நிலையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக உப்புவெளி பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
Comments
Post a Comment