பல திருட்டுப் பொருட்களை வைத்திருந்த நபர்களுக்கு நீதவான் கொடுத்த உத்தரவு
சேருவில பிரதேசத்தில் வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்தமை, திருட்டு பொருட்களை தம் வசம் வைத்திருந்தமை போன்ற குற்றச் செயல்களுடன் தொடர்புடைய இருவருக்கு தலா 35 ஆயிரம் ரூபாய் தண்டப்பணமும், மூன்று மாதம் கட்டாய சிறைதண்டனையும் விதித்து மூதூர் நீதிமன்ற நீதவான் எம்.எஸ்.எம்.சம்சுதீன் இன்று உத்தரவிட்டார்.
41 மற்றும் 25 வயதுடைய இருவருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர்கள் கடந்த 2015ம் ஆண்டு காலப்பகுதியில் சேருவில பகுதியில் வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்து, மோட்டார் சைக்கிள் ஒன்றையும் வீட்லுள்ள பெறுமதியான பொருட்களையும் திருடி தம்வசம் வைத்திருந்தனர்.
இவர்களுக்கு எதிராக சேருநுவர பொலிஸாரினால் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த நிலையில் குறித்த இரு நபர்களையும் குற்றவாளியாக இனங்கண்டு ஒவ்வொருவருக்கும் தலா 35 ஆயிரம் ரூபாய் தண்டப்பணமும், மூன்று மாதம் கட்டாய சிறைதண்டனையும் விதித்து நீதவான் உத்தரவிட்டார்.


Comments
Post a Comment