திருகோணமலை வளாக மாணவர்களின் கவனயீர்ப்பு போராட்டம்
கிழக்குப் பல்கலைக்கழக திருகோணமலை வளாக மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த போராட்டம் நேற்று திருகோணமலை பல்கலைக்கழக கோனேசபுரி வீதியை மறித்து முன்னெடுத்துள்ளனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திருகோணமலை பல்கலைக்கழக புதிய விஞ்ஞானபீட கட்டட திறப்பு விழா மற்றும் கேட்போர் கூடத்துக்கான அடிக்கல் நடும் விழாவில் கலந்து கொள்வதற்காக வருகை தரும் வேலையிலேயே இவ்வாறு வீதிமறியல் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
தங்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுமாறும் கோரியே இந்த போராட்டம் இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறித்த அவ்வீதியை தவிர்த்து பல்கலைக்கழக வளாகத்தின் பின் பகுதியில் உள்ள மைதானத்திற்குள் விமானத்தில் வந்து பின் வழியால் குறித்த விழாவில் பங்கேற்று விட்டுச் சென்றுள்ளார்.
நிகழ்வுகள் அனைத்தும் நிறைவுபெற முன்பும் நிகழ்வின் பின்பும் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதுடன் போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது.
மேலும், நிகழ்வுகளில் ஏனைய விருந்தினர்கள் மாற்று வழியினைப் பயன்படுத்தினார்கள், கலகம் அடக்கும் பொலிஸார் உட்பட விசேட அதிரடிப்படையினர் என பலத்த பாதுகாப்புடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டுள்ளனர்.


Comments
Post a Comment