ஆளுமை விருத்தியை மேம்படுத்த இளைஞர் பயிற்சி முகாம்


Ihzana Fareed


இளைஞர் சேவைகள் மன்றத்தினால் ஆளுமை விருத்தி தலைமைத்துவம் தொடர்பான மூன்று நாள் பயிற்சி முகாம் சீனக் குடா தமிழ் வித்தியாலயத்தில் நடைபெற்றுள்ளது.


இந்நிகழ்வின், இறுதி நாள் நிகழ்வு நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.
இதில், பல்வேறு தலைமைத்துவ பயிற்சி, ஆளுமை விருத்தி, உளவளத் துறை சேவை விருத்தி உட்பட பல நிகழ்ச்சித் திட்டங்கள் நடைபெற்றன .
செயலமர்வின் இறுதி நிகழ்வின் போது பங்குபற்றிய இளைஞர், யுவதிகளுக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.



குறித்த நிகழ்வில் ,பிரதேச சபை உறுப்பினர்கள், திருகோணமலை மாவட்ட இளைஞர் சேவை மன்றத்தின் உதவிப் பணிப்பாளர் சாந்த அபேவிக்ரம, மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி எஸ்.ரவிக்குமார் உட்பட இளைஞர் சேவை உத்தியோகத்தர்கள், இளைஞர், யுவதிகள் என பலரும் பங்கேற்றனர்.


Comments