வெலிக்கடை சிறைச்சாலை உத்தியோகத்தரிடமிருந்து கஞ்சா மீட்பு



வெலிக்கடை சிறைச்சாலை உத்தியோகத்தரொருவர் ஒருதொகை கேரலா கஞ்சாவுடன் வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரிடமிருந்து 10 கிலோ கிராம் கேரலா கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்போது சந்தேகத்தின் பேரில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சுற்றிவளைப்பை  பொலிஸ் விசேட அதிரடிப் படைப் பிரிவினர் மேற்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Comments