முற்றிப் போன குடும்ப மோதல் : கணவன் - மனைவி வைத்தியசாலையில்
Ihzana Fareed
திருகோணமலை - கல்யாணபுர பகுதியில் கணவரும், மனைவியும் நஞ்சருந்தி தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று மாலை 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. நஞ்சருந்திய நிலையில் இருவரையும் அயலவர்கள் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
குறித்த இருவரும் காதலித்து திருமணம் செய்ததாகவும் இருவருக்குமிடையில் ஏற்பட்ட வாக்குவாதமே நஞ்சருந்துவதற்கு காரணம் என்றும் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதேவேளை, நஞ்சறுந்திய நிலையில் காணப்பட்ட இருவரையும் அயலவர்களின் உதவியுடன் கோமரங்கடவெல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
நஞ்சருந்திய இருவரும் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், குறித்த இருவருக்கும் 07 வயதில் பெண் குழந்தை இருப்பதுடன், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments
Post a Comment