கேரளா கஞ்சா வைத்திருந்த இருவருக்கு விளக்கமறியல்!
திருகோணமலை - புல்மோட்டை பகுதியில் பத்து கிராம் கேரளா கஞ்சா வைத்திருந்த இருவரை இம்மாதம் 8ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் சமிலா குமாரி ரத்நாயக்க இன்று உத்தரவிட்டுள்ளார்.
தொழில் நிமித்தம் குறித்த சந்தேக நபர்கள் புல்மோட்டை பகுதிக்கு சென்றுள்ளனர். இந்நிலையில், இவர்களிடம் கேரளா கஞ்சா வைத்திருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இந்த தகவலின் அடிப்படையில் பத்து கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நிந்தவூர் மற்றும் சம்மாந்துரை பகுதியைச் சேர்ந்த 44 மற்றும் 43 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் என்றும் பொலிஸார் கூறியுள்ளார்.
இதேவேளை, கைது செய்யப்பட்ட இருவரும் திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் முன்னிலைப் படுத்தப்பட்டுள்ளனர். இதன்போது இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
Mubarak


Comments
Post a Comment