முஸ்லிம் மாணவிகள் பர்தா அணிந்து பரீட்சை எழுத தடை !

உயர்தர பரீட்சை நாடு முழுவதும் ஆரம்பமாகியுள்ள நிலையில், முஸ்லிம் மாணவிகள் பர்தா அணிந்து பரீட்சை எழுத பல பகுதிகளில் தடை விதிக்கப்பட்டுள்ள சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில் காலி துண்டுவ  முஸ்லிம் மஹா வித்தியாலய மாணவிகளும் குறித்த பிரச்சினைக்கு முகம் கொடுத்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

காலி துண்டுவ  முஸ்லிம் மஹா வித்தியாலய மாணவிகள் பெந்தோட்டையில் உள்ள பெரும்பான்மை பரீட்சை நிலையம் ஒன்றில் பரீட்சை எழுத சென்றுள்ளனனர். நேற்றைய தினம் குறித்த மாணவிகள் பர்தா அணிந்து பரீட்சை எழுத அவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

நேற்று பர்தா அணிந்து பரீட்சை எழுத தடை விதிக்கப்பட்ட அதேவேளை   இன்று குறித்த  முஸ்லிம் மாணவிகளின் தலையை மறைத்து  பரீட்சை எழுதவும் முற்றுமுழுதாக  தடை  விதிக்கபட்டுள்ளது.

 ஹபீஸ் மரிக்கார்

Comments